கொரோனா பரவலுக்கு காரணமான உணவகம் ஒன்றுக்கு ஆயிரம் டொலர்கள் அபராதம்

49

கொரோனா தொற்று பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்தாமல், தொற்றுப் பரவலுக்கு காரணமாக இருந்ததாக, Vaughan பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு யோர்க் பிராந்திய சுகாதார அதிகாரிகள் 1000 டொலர் அபராதம் விதித்துள்ளனர்.

Cafe Landwer என்ற குறித்த உணவகத்தில் கடந்த முதலாம் நாள், ஐந்து பணியாளர்களுக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன், மேலும் இருவருக்கு தொற்றுக்கான வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இனங்காணப்பட்ட ஐவரில் இருவருக்கு மிகவும் கவலைக்குரிய, திரிபடைந்த  வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உணவகத்துக்கு வருபவர்களின் பட்டியலை பேண வேண்டும் என்ற சுகாதார அதிகாரிகளின் உத்தரவை குறித்த உணவகம் பின்பற்றியிருக்கவில்லை.

இதனால் அங்கு சென்றவர்களைக் கண்டறிவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

மார்ச் 19ஆம் நாள் தொடக்கம் 24ஆம் நாள் வரையான காலப்பகுதியில் Cafe Landwer உணவகத்துக்குச் சென்றவர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், அறிகுறிகள் தென்படுபவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *