முக்கிய செய்திகள்

கொரோனா பாதிப்பு; உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது

71

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது 199 நாடுகளில் பரவி விட்டது. இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை உலுக்கியுள்ள கொரோனா வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பிற நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

இதன் காரணமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறக்குறைய 6 லட்சத்தை தொட்டுள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 27, 352 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து 133,355 பேர் மீண்டுள்ளனர்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *