ருமேனிய தலைநகர் புக்காரெஸ்டில் (Bucharest) கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவனையில் ஏற்பட்ட தீ விபத்தினால் நான்கு அறைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மூன்று பேர், அந்த இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், ஒருவர் மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்றும், மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐந்தாவது நபரின் சடலம், பின்னர் கழிவறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு சிகிச்சை பெற்று வந்த 102 நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.