கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து அம்ச திட்டமொன்றை மத்திய அரசு வகுத்துள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் 12 மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர்கள், தலைமை செயலாளர்கள், ஆட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
அதில் கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் பரிசோதனையை மேலும் அதிகரித்தல்,
வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தொடர்பாகவும் கண்டறிதல் வேண்டும்,
அத்துடன் பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை தயார்நிலையில் எப்போதும் வைத்திருத்தல் வேண்டும்,
மேலும் முறையான கொரோனா வைரஸ் தொற்றின் நடத்தை விதிமுறையை உறுதி செய்தல் அவசியமாகும்.
கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி வரும் மாவட்டங்களை இனங் கண்டு தடுப்பு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், ஆகியவைகளே ஐந்து அம்ச திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது.