முக்கிய செய்திகள்

கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் கொரோனாவால் பலி

32

கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் கார்லோஸ் ஹோம்ஸ் ட்ருஜிலோ  (Carlos Holmes Trujillo) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை அவர் மருத்துவமனையில்  மரணமடைந்தார் என்று, கொலம்பிய ஜனாதிபதி இவன் டியூக் (Ivan Duque) தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.

69 வயதுடைய, கார்லோஸ் ஹோம்ஸ் ட்ருஜிலோ (Carlos Holmes Trujillo) கொரோனா தொற்றுக்குள்ளான பின்னர் கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவிலுள்ள மருத்துவமனையில், ஜனவரி 13 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

கொலம்பியாவின் முன்னாள் இராஜதந்திரியான ட்ருஜிலோ,  அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான தூதுவராகவும், ரஷ்யா உட்பட பல நாடுகளிலும் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *