முக்கிய செய்திகள்

கொல்கத்தா தீவிபத்தில் அவசர உதவிப் பணியாளர்கள் 9 பேர் உயிரிழப்பு

34

மேற்கு வங்க மாநிலத்தின், கொல்கத்தா நகரில் அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் அவசர உதவிப் பணியாளர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்திய தொடருந்து துறைக்கு சொந்தமான கட்டிடத்தின் 13வது தளத்தில் இன்று முன்னிரவில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, 8 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கட்டடங்கள் நெருக்கமான அந்தப் பகுதியில் தீயை அணைக்கும் பணியில் கடும் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 9 அவசரகாலப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் நான்கு தீயணைப்பு வீரர்கள், இரண்டு ஒதுக்குப் பாதுகாப்பு படை வீர்ர்கள், கொல்கத்தா காவல்துறை அதிகாரி ஒருவரும் உள்ளடங்கியுள்ளனர் என்று மாநில இடர் முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *