முக்கிய செய்திகள்

கொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’

13

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ராஜ்புத் வகுப்பின் 5ஆவது கப்பலான ரன்விஜய் கப்பல் நாளைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசிக்கவுள்ளது.

சிறிலங்கா  மக்களின் புத்தாண்டுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை செய்தியுடன் ரன்விஜய் கப்பல் நாட்டுக்குள் பிரவேசிக்கவுள்ளதாக சிறிலங்காவுக்கான  இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு சொந்தமான பிரபல கப்பலாக கருதப்படுவதுடன் நீர்மூழ்கி மற்றும் ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்புகளையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலின் கப்டனாக நாராயணன் ஹரிஹரன் கடமையாற்றுகிறார்.

சிறிலங்காவுக்கும்  இந்தியாவுக்கும் இடையில் நெருக்கமான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வளர்க்கும் நடவடிக்கையாக ராஜ்புத் வகுப்பின் 5ஆவது கப்பலான ரன்விஜய் இலங்கை வரவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *