முக்கிய செய்திகள்

கோட்டாபய போர்க்குற்றவாளி என்பதை அவரே ஏற்றுக்கொண்டுவிட்டார்; நாடாளுமன்றில் சிறிதரன்

97

போர்க்குற்றங்களை இழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபயவே ஒப்புக்கொண்டவிட்டார் என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், அம்பாறை உகன பிரதேசத்தில் போரை தானே புரிந்ததாகவும், தானே துப்பாகியால் சுட்டு அனைத்தையும் நிறைவு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ள ஜனாதிபதி கோட்டாபயவின் மீது போர்க்குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இதற்கு மேல் என்ன சாட்சியம் தேவையாக இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலேயே சிறிலங்கா தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நாடுகள் இந்த விடயத்தினைக் கவனத்தில் கொண்டு இனஅழிப்பு போர்க்குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழர்களின் பூர்வீகத்தினை அழிப்பதற்கு முனையும் பௌத்த சிந்தனையாளர்களால் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் அவர்களை மீளக் குடியேற்ற முடியாதிருக்கின்றார்கள்.

சிங்கள பௌத்த விகாரைகளை புரதனமானவை என்று கூறி அவற்றை மீள நிர்மாணிப்பதற்கு விளையும் அரசாங்கத்தினால் ஏன் பொலன்நறுவை போன்ற பகுதிகளில் உள்ள புராதன சிவன் ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு முடியாதிருக்கின்றது.

காலியில் இருந்த சிவன் ஆலயம் எங்கே. அதுபற்றிய ஆய்வினைச் செய்வதற்கு தயாராக இருக்கின்றார்களா? என்றார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *