முக்கிய செய்திகள்

கோட்டாவை அழைத்தார் ஷி ஜின்பிங்

22

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சீனாவுக்கு வருமாறு,  சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை இரண்டு நாடுகளின் தலைவர்களும், தொலைபேசி மூலம் உரையாடியிருந்தனர்.

இதன் போது சிறிலங்கா அதிபரை விரைவில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என்று சீன தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா ஜனாதிபதிக்கு சீன ஜனாதிபதி ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த போதும்,கொரோனா பரவல் நிலை காரணமாக,  அவரால் இதுவரை சீனப் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சீன தூதரக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேவேளை, அம்பாந்தோட்டையில், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்துக் கொடுக்க சீனா முன்வந்திருப்பதாகவும், இதற்கு சீன ஜனாதிபதி சாதகமான பதிலை அளித்துள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *