முக்கிய செய்திகள்

கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு

51

திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில், பழமைவாய்ந்த தமிழ் கல்வெட்டு ஒன்று கடந்தவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராவணன் கல்வெட்டுக்கு அருகிலேயே இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கல்வெட்டு 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலும் கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நெல், அரிசி என்பன தானமாக வழங்கப்பட்டதைக் குறிப்பிடும் வகையில் இந்தக் கல்வெட்டு அமைந்திருப்பதாகவும், பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *