கோப்பாயில் துயிலும் இல்லம் மற்றும் நல்லூர் வீதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாக இராசபாதை வீதியில் தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இன்று(27) முற்பகல் 11.30 மணிக்கு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 3 மாவீரர்களின் தாயாரும் அரசால் சிறைப்பிடிக்கப்பட்டவருமான அன்னை ஜெயக்குமாரி சுடரேற்றினார்.
கோப்பாயில் துயிலும் இல்ல முன் வீதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
வடக்கு மாகாண அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று துயில் கொள்ளும் ஆயிரக்கணக்கான வீர மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கோப்பாய் துயிலுமில்லத்தில் இராணுவ பிரிகேட் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலேயே வீதியில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


கோப்பாயில் துயிலும் இல்லம் மற்றும் நல்லூர் வீதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
Nov 28, 2017, 02:46 am
1111
Previous Postமன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி
Next Postகிழக்குப் பல்கலைக்கழகத்திலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்