முக்கிய செய்திகள்

சசிகலாவின் அக்கா மகன் தினகரனுக்கு 25 கோடி ரூபா அபராதம்

1140

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் அக்கா மகன் தினகரனுக்கு அமுலாக்கத்துறை 25 கோடி ரூபா அபராதம் விதித்ததை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

கடந்த 1995, 1996–ம் ஆண்டு காலப்பகுதியில் தினகரனின் வங்கி கணக்கிற்கு வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை பணம் வைப்பிலிடப்பட்டதனைத் தொடர்ந்து இவர் மீது அன்னியசெலாவணி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கு விசாரணைகளின் பின்னர் பின்னர், அவருக்கு 25 கோடி ரூபாஅபராதம் விதித்து உத்தரவிட்ட போதும் தினகரன அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். மேல் முறையீட்டிலும் அபராதத் தொகை நிர்ணயித்தது சரிதான் என உத்தரவிட்டதனைத் தொடர்ந்து தினகரன் உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கின் இன்று தீர்ப்பு வெளியாதன நிலையில் தினகரனுக்கு அமுலாக்கத்துறை விதித்த அபராதத்தை உறுதி செய்த நீதிபதிகள், தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ததுடன் தினகரனை திவாலானவராக அறிவிக்கக் கோரிய வழக்கின் விசாரணை ஜனவரி 31ம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *