சசிகலா எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
“சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதட்டமும் இல்லை.
அமைச்சர் என்ற முறையில் இல்லாமல் தொண்டனாகவே காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்று புகார் அளித்தோம்.
சசிகலாவை எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் அதிமுகவில் சேர்க்கமாட்டோம்.
சசிகலா எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, சசிகலா நாளை சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக தலைமையகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.