முக்கிய செய்திகள்

சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

97

ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும், முதல் கட்ட தேர்தல் வரும் 27ஆம் நாள் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அத்துடன், அசாம் மாநிலத்திலும், 27 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 6ஆம் நாள் வரையில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களிலும் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில், போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்கப்பட்டு வருகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *