சட்டீஸ்கரில் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த விரும்பவில்லை என்று மாநில சுகாதார அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிராக ‘கோவாக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
எனினும், ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்னரே அதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சட்டீஸ்கர் மாநில சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
அந்த தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவடைவதற்கு முன்பாக, வேகம் காட்டக் கூடாது.
இதை மற்ற நிறுவனங்களும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கோரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.