முக்கிய செய்திகள்

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

1052

பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91.

கடந்த 1925ம் வருடம் அக்டோபர் 21ல் பஞ்சாப் மாநிலம் அடேலியில் பிறந்த இவர் லக்னோவில் சட்டம் பயின்றார். சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். 29 செப்டம்பர் 1985 முதல் 11 ஜூன் 1987 வரை பஞ்சாப் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 1990 முதல் 91 வரையிலும், 2004 முதல் 2011 வரை தமிழக கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். 2000 நவம்பர் 9 முதல் 2003 ஜனவரி 7 வரை உத்தர்காண்ட் மாநில முதல் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். 1998 ம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில், ரசாயனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பர்னாலா, கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *