முக்கிய செய்திகள்

சந்திரனுக்கு சுற்றுலாப்பயணம் – 2 பேரை அமெரிக்க நிறுவனம் அனுப்புகிறது

1551

அமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், விண்வெளி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்கிறது. இந்த தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் முஸ்க் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்த 2 பேர், இந்த விண்வெளிப்பயணத்துக்கு பெரும் தொகையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் டெபாசிட் செய்து உள்ளனர்.

இதுபற்றி எலோன் முஸ்க் கூறும்போது, “அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவின் ஒத்துழைப்பால்தான் இந்த திட்டம் சாத்தியம் ஆகிறது. இதற்கு முன்பு யாரும் சென்றிராத வகையில் இந்த 2 பேரும், அதிவேகமாக சூரிய மண்டலத்துக்குள் செல்வார்கள்” என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் விண்வெளி சுற்றுலா செல்லக்கூடிய 2 பேரின் பெயர் விவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். இருப்பினும், “அவர்கள் இருவரும் ஒருவரை மற்றவர் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள் அல்ல” என்று அவர் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *