உள்நாட்டில் தயாரக்கப்பட்டுள்ள சனோடைஸ் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்கள் பாவனைக்கு விடுவது தொடர்பாக இதுவரையில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று கனடிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அந்த தடுப்பூசி தொடர்பில் தமது ஆழ்ந்த அவதானம் உள்ளதாகவும் சில மேம்பட்ட பரிசோதனைகளை கனடிய விஞ்ஞான ஆய்வாளர்கள் மேற்கொள்ளப் எதிர்பார்த்திருப்பதாகவும் அத்துறை குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய சூழலில் வாய்மூலமான தடுப்பு மருந்துகளையும் கனடா இன்னமும் அனுமதிக்க வில்லை என்றும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அண்மைய காலத்தில் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி விநியோக நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பெறப்பட்டு மக்களுக்குச் செலுத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.