தொழில்களுக்கான மீட்பு திட்டம், வளர்ச்சி, மற்றும் மீள் எழுச்சி எனும் தலைப்பிலான சமஷ்டி அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கன வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
101.4பில்லியன் டொலர்கள் மொத்த செலவீனமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளல், நிவாரணங்கள் வழங்குதல், நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டெடுத்தல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான திட்ட முன்மொழிவுகளும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
பிரதி பிரதமரும், நிதி அமைச்சருமான, கிறிஸ்டியா பிரீலாண்ட் இந்த வரவு செலவுத்திட்டத்தினை இன்றையதினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவுத்திட்டத்தில் தேசிய சிறுவர் பராமரிப்பு, சுகாதாரத்துறை, வணிக நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்கு விசேட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், பற்றாக்குறை 354.2பில்லியன் டொலர்களாக இருக்கும் என்றும் ஆண்டின் இறுதியில் அது 154.7பில்லியன் டொலர்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் உள்நாட்டு உற்பத்தி வீதமானது 4.2சதவீதமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை விடவும் கொரோனா தொற்றுப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டவுடன் உள்நாட்டு முதலீடுகள் வெகுவாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.