சர்ச்சையில் சிக்கினார் ஒன்ராரியோ நிதி அமைச்சர்

109

ஒன்ராரியோ நிதி அமைச்சர் ரோட் பிலிப்ஸ் (Rod PhillipS) மற்றும் அவரது துணைவியார் விடுமுறைக்காக வெளிநாட்டுக்குச் சென்று தங்கி உள்ளமை சர்ச்சைகைள உருவாக்கியுள்ளது.

கனடியர்கள் அத்தியாவசிய தேவையற்ற பயணங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிற்கும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்ராரியோ நிதி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவர் விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் ஒன்று இன்ஸ்டக்கிராமில் வெளியிடப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

எனினும், அவர் எப்போது நாட்டை விட்டு வெளியேறினார் என்பது உறுதியாகதெரியாத நிலையில் இறுதியாக கடந்த எட்டாம் திகதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்றதாககூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த புகைப்படம் கடந்த 11ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *