முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கும் சீனாவுக்கு இலங்கை அடிபணிவது விரோதமானது என்று விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்

625

சனநாயக முறையில் நாகரீகமான அரசியலை முன்னெடுத்துவரும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பயணிக்காது, பொதுத் தேர்தலைக்கூட நடத்தாது சனநாயகத்துக்கு விரோதமான முறையில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்துவரும் சீனாவுக்கு அடிபணிந்து செல்வதானது, மக்கள் ஆட்சிக்கு விரோதமானது என்று, நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் எவ்வித அக்கறையுமின்றி ஒரு தரப்பை அதிகாரத்தில் வைத்துக் கொள்ள அரச தலைவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதுடன், பன்னாட்டுச் சமூகத்துக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்து, நாட்டை இருள் சூழ்ந்த யுகத்தை நோக்கி நகர்த்தி வருகிறார் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், பன்னாட்டு மனித உரிமை நியமங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள நிலையில், இதுதான் சனநாயக ஆட்சியா எனவும் விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு அடிப்பணிந்து நடந்து கொள்ள மாட்டோம் என்று மைத்திரிபால சிறிசேன கூறுவதாகவும் தெரிவித்துளள அவர், ஆனால் சீனாவுடன் அடிபணிந்து நடந்து கொள்ளலாமா எனவும் கேள்வி எழுப்பியுளள்துடன், கோடிக்கணக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை பகிர்கின்றனர் எனவும், எவ்வாறு அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளப் போகின்றனர் எனவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனா சனநாயக அரசியலை முன்னெடுக்கும் நாடு அல்ல எனவும், அங்கு எந்தவொரு பொது வாக்கெடுப்பும் நடைபெறுவதில்லை என்றும், சர்வாதிகாரத்தில் இயங்கும் நாட்டில் கடனைப் பெற்றால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் எனவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *