சவுதி அரேபியாயில் இன்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
வளைகுடா நாடான சவுதி அரேபியாவிற்கு கொரோனா தடுப்பூசி கிடைத்தது.
இதையடுத்து, அங்கு இன்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தௌபிக் அல் ரபியா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.