முக்கிய செய்திகள்

சவுதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1293

சவுதி அரேபியாவில் அந்த நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றமைக்காக இளவரசருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துர்க்கி பின் சௌத் அல்-கபீர் என்ற அந்த இளவரசருக்கு ரியாதில் வைத்து மரணதண்டனை  நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டோர் பொதுவாக சிரச்சேதம் செய்யப்படுவது வழக்கம் என்ற போதிலும், இந்த மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இளவரசர் கபீர் இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டோரில் 134வது நபர் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது.

இளவரசர் கபீர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும், இந்த மரண தண்டனை நிறைவேற்றமானது பாதுகாப்பையும் நீதியையும் பாதுகாக்க அரசு ஆர்வமுடன் இருப்பதை மக்களுக்கு உறுதிப்படுத்தும் எனவும் சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சவுதி அரேபியாவில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர்,குற்றவாளிக்கு மரண தண்டனையை வலியுறுத்தாமல் இருக்க நிதி இழப்பீடாக கொடுக்கும் “ரத்தப் பணத்தை` ஏற்க மறுத்துவிட்டதாக அல் அரேபியா செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *