கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் முடிவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற வேண்டிய இந்தப் பரீட்சைகள் கொரோனா தொற்றினால் பிற்போடப்பட்டு, மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தன.
இந்தப் பரீட்சையில் சிறிலங்கா முழுவதிலும், ஆறு இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர்.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 56 மாணவர்களும் கபொத சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை தோற்றியுள்ளனர்.
இவர்களுக்காக, நாடு முழுவதும் 40 தனியான பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள 321 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், அவர்களுக்காக பரீட்சை நிலையங்களில் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன என்றும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.