கிளிநொச்சியில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச்சான்றிதழை ஏற்க இளைஞர்கள் மறுத்துள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வில் குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் நிறைவில், சான்றிதழ்கள் தனி சிங்கள மொழியில் காணப்பட்டமை தொடர்பில் இளைஞர்கள் அதிப்தி வெளியிட்டனர்.
இதன் காரணமாக குறித்த நிகழ்வின் இறுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மன்ற உதவி பணிப்பாளர் தபேந்திரன் குறிப்பிடுகையில், “குறித்த சான்றிதழானது அவசரமாக இளைஞர்களுக்கு வழங்குவதற்காக வரவழைக்கப்பட்டது.
சான்றிதழானது இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கியமானவர்களின் ஒப்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 காலப்பகுதியில் சிங்கள மொழி எழுதுவினைஞர்கள் மாத்திரமே கடமையில் இருந்தனர். தமிழ் ஊழியர்களை அழைக்க முடியாது போனமையாலே இவ்வாறான சிக்கல் ஏற்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.