முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிம்பாப்வேயை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

869

சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பக்தர் சமான் பொறுப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், சிம்பாப்வேயுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி புலவாயோ நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன் சாரி, சாமு சிபாபா ஆகியோர் களமிறங்கினர். இருவ்ரும் விரைவில் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய கேப்டன் ஹாமில்டன் மசகட்சா அரை சதமடித்து அசத்தினார். இவர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பீட்டர் மூர் 50 ரன்களில் அவுட்டானார்.

இவர்களை தவிர மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 49.2 ஓவரில் 194 ரன்களில் ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஹசன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் அல் ஹக், பகர் சமான் ஆகியோர் இறங்கினர்.

இமாம் அல் ஹக் 44 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து பாபர் அசம் இறங்கினார். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 36 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பகர் சமான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் எடுத்தார்.

ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *