முக்கிய செய்திகள்

சிம்பாப்வே நாட்டின் பொதுத்தேர்தலில் பெருமளவான மக்கள் இன்று ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்

255

சிம்பாப்வே நாட்டின் வரலாற்றில் அந்த நாட்டை வெகுகாலம் ஆட்சிசெய்த ரொபர்ட் முகாபே அதிபர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதலாவது பொதுத்தேர்தலில் பெருமளவான மக்கள் இன்று ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.

சிம்பாப்வேயின் அடக்குமுறை மிகுந்த கடந்த காலத்தை உடைப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பு என்று இந்த தேர்தலை வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் பாராட்டியுள்ளனர்.

தற்போது அங்கு அதிபர் தேர்தல் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் உள்ளூர் தேர்தல்களும் ஒருசேர நடந்து வருகிறது.

இந்த அதிபர் தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிடும் சிம்பாப்வேயின் இடைக்கால அதிபரான எம்மர்சன் முனங்காக்வாவுக்கும், அவரது பிரதான போட்டியாளரான நெல்சன் சாமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் சிம்பாப்வே நீண்ட காலமாக ஆட்சி செய்த ரொபர்ட் முகாபே இந்த தேர்தலில் இடைக்கால அதிபர் முனங்காக்வாவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

சிம்பாப்வே கடந்த 1980ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர், அந்த நாட்டின் முதல் அதிபராக பதவியேற்ற ரொபர்ட் முகாபே, ஆப்ரிக்க கண்டத்திலேயே ஒரு நாட்டை அதிக காலம் ஆட்சிசெய்தவர் என்ற வரலாற்றுப் பதவிவைப் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவர் இராணுவத்தின் உதவியுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *