சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அசாத்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸுடன் சிறிய அறிகுறிகளை உணர்ந்த பின்னர் தம்பதியினர் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை வீட்டில் தனிமையில் இருந்து குணமடைந்த பிறகு பணிக்கு திரும்புவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.