சிரிய தடுப்பு முகாமில் கனடிய சிறுமி மீட்பு

47

கனடாவைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வடகிழக்கு சிரியாவில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டு, கனடாவுக்கு பயணமாகிக் கொண்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி ஒருவரும், சிறுமியின் உறவினர் ஒருவரும் மேற்கொண்ட முயற்சியினாலேயே அவர் தடுப்பு முகாமில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், சிறுமியின் கனேடிய தாயார் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் தனது இதயம் மில்லியன் துண்டுகளாக உடைந்து போனதாக குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

தாயும் சிறுமியும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் குர்திஷ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இங்கு 30 வரையான கனேடியர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களுக்கு கனேடிய அரசு எந்த உதவிகளையும் வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *