முக்கிய செய்திகள்

சிறந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி இது தான்- பிபா தலைவர் பெருமிதம்

846

சர்வதேச கால்பந்து சம்மேளன (பிபா) தலைவர் ஜியானி இன்பான்டினோ மாஸ்கோவில் நேற்று அளித்த பேட்டியில், ‘இதுவரை நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இதுவே சிறந்த போட்டி என்று என்னால் உறுதிபட சொல்ல முடியும். உயர்தரமான இந்த போட்டிக்கான எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்த ரஷியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்.) தொழில்நுட்பம் நல்ல பலனை அளித்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் கால்பந்து ஆட்டத்தின் தன்மையை மாற்றவில்லை. கால்பந்து ஆட்டத்தில் நடைபெறக்கூடிய தவறுகளை களைந்து இருக்கிறது. நடுவர்கள் சரியான முடிவை எடுக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. வி.ஏ.ஆர். முறை அமல்படுத்தியதன் மூலம் ஆப்-சைடு கோல் அனுமதிக்கப்படுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. போட்டியை நேரில் காண ஏறக்குறைய 10 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் ரஷியா வந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த போட்டியை 300 கோடிக்கு மேற்பட்டவர்கள் டெலிவிஷன் மூலம் கண்டு களித்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *