சிறிலங்காவின் இணைதளங்கள் மீது சைபர் தாக்குதல்

43

சிறிலங்காவின் .lk  என்ற டொமைனின் கீழ் இருக்கும்  சில இணையத் தளங்கள், இன்று காலை சைபர் தாக்குதலால் முடங்கியதாக கூறப்படுகிறது.

இவ்வாற சைபர் தாக்குதலுக்கு இலக்கான இணையத் தளங்களில், உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் பதிவிடப்பட்டிருந்தது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊடகவியாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது தொடர்பான பிரச்சினைகள், மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டமை, இனவாத செயற்பாடுகள் மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்தும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும், இணையதளங்களில் தரவுகளை திருடவில்லை என்றும், பதிவுகளை நீக்கவில்லை என்றும் சைபர் தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *