முக்கிய செய்திகள்

சிறிலங்காவின் நாணயப் பெறுமதி வீழ்ச்சி

115

சிறிலங்காவின் நாணயப் பெறுமதி கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் விற்பனைப் பெறுமதி நேற்று 198.26 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 192.85 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா வரலாற்றிலேயே, அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு, மிகமோசமாக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பம் இது  என்றும் கூறப்படுகிறது.

அடுத்து வரும் வாரங்களில் சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்க டொலரின் பெறுமதி விரைவில் 200 ரூபாவைத் தாண்டும் வாய்ப்பு உள்ளதாகவும் பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *