முக்கிய செய்திகள்

சிறிலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்து மார்க்கம்-ஸ்ரோவில் நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சு

50

சிறிலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்து மார்க்கம்-ஸ்ரோவில் (Markham—Stouffville) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலெனா ஜஸெக் (Helena Jasek) நாடாளுமன்றில் உரையாற்றி உள்ளார்.

அவருடைய நாடாளுமன்ற உரையில், சிறிலங்கா குறித்த புதிய ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்றில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதைக் காட்டும் தெளிவான அறிகுறிகள் குறித்துக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

 “பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகளும், செயல்களும் மீண்டும் நிகழக்கூடிய போக்குத் தற்போது காணப்படுவதாக” இந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனது மார்க்கம்-ஸ்ரோவில் தொகுதியில் உள்ள தமிழ்க் கனேடிய சமூகத்தினரும் இதே கவலையைக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தார்மீக அடிப்படையிலான பலமான நிலைப்பாடு ஒன்றை எடுக்குமாறு கனேடிய வெளியுறவுத் திணைக்களத்தை ஊக்குவிப்பது; மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவளிப்பது; சர்வதேச மனித உரிமைகள் உபகுழு சிறிலங்கா குறித்த ஆய்வொன்றை மேற்கொள்ளவேண்டுமெனக் கோருவது; மற்றும், இந்தச் சபையில் நிறைவேற்றப்பட்ட – இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்குச் சுதந்திரமான, சர்வதேச விசாரiணைப் பொறிமுறையை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பைக் கோரும் – பிரேரணையைச் செயற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை நாம் எடுக்கலாமெனப் பேர்ள் (PEARL) போன்ற அமைப்புக்கள் பரிந்துரைத்துள்ளன.

இந்தப் பரிந்துரைகளை நான் ஆதரிக்கிறேன், அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கு சமஷ்டி அசசாங்கம் அழுத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கோரினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *