முக்கிய செய்திகள்

சிறிலங்காவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை

54

சூயஸ் கால்வாயில் கொள்கலன் கப்பல் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளதால், சிறிலங்காவில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று, அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சூயஸ் கால்வாயில் இரட்சத சரக்குக் கப்பல் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளதால், அதன் ஊடான போக்குவரத்து ஐந்தாவது நாளாக தடைப்பட்டுள்ளது.

சூயஸ் கால்வாயில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால், சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும்,  இரண்டு வாரங்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அடுத்த எரிபொருள் கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்தே வரவுள்ளதால், சூயஸ் கால்வாயை அது பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *