முக்கிய செய்திகள்

சிறிலங்காவில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணம்.

43

சிறிலங்காவில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 528ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆறாயிரத்து 593 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *