மிலேனியம் சவால் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், சிறிலங்காவுக்கான உதவி தொடர்பாக அதில் ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எம்சிசி நிறுவனம் சிறிலங்காவுக்கு வழங்க முன்வந்த 480 மில்லியன் டொலர் கொடையை, பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இதுவரை இணங்கவில்லை.
இந்த நிலையில் எம்.சிசி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம் நாளை வொசிங்டனில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கான உதவித் திட்டம் குறித்தும் ஆராயப்படும் என்று அமெரிக்க தூதரக பேச்சாளர் நான்சி வன்ஹோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.