சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்கா தொடர்பாக ஜெனிவாவில் புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ள அனுசரணை நாடுகளின் குழுவில் கனடாவும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையிலேயே கனேடிய தூதுவர் டேவிட் மக்கினன், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்த விரிவான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.