முக்கிய செய்திகள்

சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும்

44

சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்க, கொழும்பு சென்றள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதாரியா இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை நேற்று சந்தித்த பின்னர், இராணுவத் தலைமையகத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த, இந்திய விமானப்படைத் தளபதி, “இந்திய- சிறிலங்கா பாதுகாப்பு உறவுகள் மேலும் உயரத்துக்குச் சென்றுள்ளது. இந்த பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுடனான இந்தியாவின் உறவுகள் , தேசிய அளவிலும், பாதுகாப்பு அளவிலும் மிகவும் நெருக்கமானவை.

இந்த உறவுகள் மேலும் மேலும் வலுப்பெறும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியும், தற்போது சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *