முக்கிய செய்திகள்

சிறிலங்கா அரசுக்கு அபாயராம விகாரதிபதி அறிவுறுத்தல்

38

அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டை மாகாண சபை தேர்தலை நடத்தினால் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அபயராம விகாரையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் இல்லாமலிருந்திருந்தால் பொதுஜன பெரமுன குறுகிய காலத்தில் எழுச்சி பெற்றிருக்காது.பொது ஜனபெரமுனவின் எழுச்சிக்கு அபயராம விகாரை பல வழிமுறைகளில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

அபயராம விகாரை இருக்கிறதா, இல்லையா என்பதை கூட பொதுதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் மறந்து விட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் காலத்திற்கு ஏற்றாற் போல் மாற்றமடையாமல் உள்ளார்.தற்போதைய அரசியல்வாதிகள் இவரிடமிருந்து பல நல்ல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

அரச நிர்வாகம் பலவீனமடைந்துள்ளது. அரச திணைக்களங்கள், மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மோசடியாளர்களாக உள்ளார்கள்.ஒரு சிலருக்கு அரச நிர்வாகம் குறித்து எவ்வித முன்னனுபவங்களும் கிடையாது. இவ்வாறான நிலையில் அரச செயலொழுங்கினை வினைத்திறனாக முன்னெடுக்க முடியாது.

தகுதியானவர்களுக்கு உரிய பதவிகளை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.மாகாண சபை தேர்தல் இலங்கைக்கு பொருத்தமற்றது.ஆகையால் மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்து செய்து, உள்ளுராட்சி மன்றங்களை பலப்படுத்துமாறு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச நாடுகளும் அழுத்தம் பிரயோக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *