முக்கிய செய்திகள்

சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயம்

54

வவுனியா – ஓமந்தை பகுதியில், சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், சேமமடு பகுதியைச் சேர்ந்த பிரசாத் மற்றும், சஜீபன் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து மரங்களைக் கடத்தி சென்ற வாகனத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் வழிமறித்தனர் என்று கூறப்படுகிறது.

குறித்த வாகனம் நிற்காமல் சென்றதால், அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் சிறிலங்கா இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *