முக்கிய செய்திகள்

சிறிலங்கா படையினரிடம் இருக்கும் காணிகளை விடுவித்து தம்மை மீள்குடியேற்றுமாறு பூநகரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

250

கிளிநொச்சி, பூநகரி மட்டுவில் நாடு கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவித்து தம்மை மீள்குடியேற்றுமாறு 15 வரையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள பிரதேச செயலகத்தில் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேறிய போதிலும், மட்டுவில் நாடு கிழக்கு மற்றும் மட்டுவில் நாடு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களின் காணிகள் சிறிலங்கா படையினரதும், காவல்துறையினரதும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் மட்டுவில் நாடு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் ஆறு குடும்பங்களும், மடடுவில் நாடு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 9 குடும்பங்களும், தமது சொந்தக்காணிகளில் தம்மை மீள்குடியேற்றுமாறு பிரதேச செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

இவ்வாறு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தமது காணிகளை கையகப்படுத்தி வைத்திருப்பதனால் தாங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உறவினர் நண்பர்கள் விடுகளில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *