முக்கிய செய்திகள்

சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சி

50

சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனடிப்படையில், டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் விற்பனைப் பெறுமதி 200.06 ஆக பதிவாகியுள்ளதாகவும் சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளுக்கு பின்னர் இன்றைய தினமே சிறிலங்கா ரூபாவின் விற்பனைப் பெறுமதி 200 ரூபாயைக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 195.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் நேற்றைய நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.96 ரூபாவாகவும், கொள்விலை 194.42 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *