முக்கிய செய்திகள்

சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பிலான ஆராய்வு!

1001

அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறப்புச் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

சனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ள குறித்த சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொள்ளவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பின்போது நாட்டில் செயற்படும் அடிப்படைவாதக் குழுக்கள் தொடர்பிலும், அதனால் சமுகங்கள் மத்தியில் ஏற்படும் சிக்கல் நிலை தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.

அத்துடன் இந்தச் சந்திப்பில் சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமயத் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *