முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறுமியை மோதி விட்டு தப்பிச் சென்ற வாகனச் சாரதியை தேடுகிறது காவல்துறை

249

ரொரண்டோ மிட்டவுன் (midtown) பகுதியில், சிறுமி ஒருவரை மோதி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்ற வாகனச் சாரதி ஒருவரைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Eglinton avenue பகுதியில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கிய 7 வயதுச் சிறுமி காலில் காயமடைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தை அடுத்து வாகனத்தை நிறுத்திய சாரதி, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய சிவப்பு நிற வாகன சாரதி, வெள்ளையினத்தைச் சேர்ந்த 60 தொடக்கம் 70 வயதுடைய பெண் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *