முக்கிய செய்திகள்

சீக்கியர்கள் தலைக்கவசம் இன்றி தலைப்பாகையுடன் உந்துருளியில் செல்வதை ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது

487

சீக்கியர்கள் தலைக்கவசம் இன்றி தலைப்பாகையுடன் உந்துருளியில் செல்வதை ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது.

இதே மாதிரியான விதிவிலக்கு ஏற்கனவே கனடாவின் மூன்று மாநிலங்களில் நடப்பில் உள்ள நிலையில், ஒன்ராறியோவும் நான்காவது மாநிலமாக இந்த சட்டத் தளர்வினை ஏற்டுத்தவுள்ளது.

இது குறித்த அறிவிப்பினை இன்று வெளியிட்டு்ள்ள ஒன்ராறியோவின் முற்போக்கு பழமைவாதக் கடசி அரசாங்கம், இந்த புதிய நடைமுறையானது சீக்கிய மக்களின் சமூக உரிமைகளையும், சமய நம்பிக்கையையும் வெளிக்காட்டுவதற்கு வழிவகை செய்வதாக தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய மாற்றம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட், வீதிகளில் பாதுகாப்பு என்பது தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கும் எனவும், ஒவ்வொருவரும் தமது சொந்த பாதுகாப்புடன், சமூக பெர்றுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *