முக்கிய செய்திகள்

சீனப் பிரதமர் அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக கனடாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கெர்ளளவுள்ளார்.

1457

பிரதமர்  ஜஸ்டின் ரூடோ உள்ளிட்ட கனேடிய தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்காக, சீனப் பிரதமர் லீ கெக்கியாங் அடுத்த வாரத்தில் கனடாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக கனடாவுக்கு எதிர்வரும் 21ஆம் நாளில் இருந்து 24ஆம் நாள் வரை பயணம் மேற்கொள்ளும் சீனப் பிரதமர், ஒட்டாவா மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்களுக்கு செல்வார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ரூடோவை ஒட்டாவாவில் சந்திக்கவுள்ள சீனப் பிரதமர், அங்கு மேலும் பல அரசாங்க முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ள நிலையில், இந்த சந்திப்புக்களின் மூலம் கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகள் மேலும் பலமடையும் எனவும் பிரதமர் அலுவலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இருநாட்டு பிரதமர்ளும் இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல் ஒருமைப்பாடு, சட்ட மற்றும் நீதித்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல், பண்பாட்டு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான இணைப்பினை பரிமாறிக்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

G20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கடந்த மாத இறுதியில் சீனாவுக்கு சென்றிருந்த பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கு அந்த நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில், சீனப் பிரதமரின் இந்த கனேடிய பயணம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையினை மேற்கொள்வதற்கு இன்னமும் சிறிது காலம் ஆகக்கூடும் என்ற போதிலும், ஆசியாவின் மிகப்பெரும் சக்தியான சீனாவுடனான உறவினை பிரதம்ர் ஜஸ்டின் ரூடோ பலப்படுத்தியுள்ளதன் ஒரு அங்கமாகவே சீனப் பிரதமரின் இந்த கனேடிய பயணம் நோக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *