சீனாவின் மத்திய நகரமான வுஹான் மற்றும் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் உள்ள ஷெங்ஸே நகரம் ஊடாக இரு சூறாவளிகள் வீசியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் வீசிய சூறாவளியால் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
குறித்த சூறாவளி வெள்ளிக்கிழமை கெய்டியன் மாவட்டம் வழியாக இரவு வீசியதில் 280 பேர் காயமடைந்துள்ளனர்.
சூறாவளியால் வுகான் நகரில் 27 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுதவிர 130 வீடுகள் சேதமடைந்தன. கட்டிடப் பணிகள் இடம்பெற்ற இடத்தில் உள்ள கூடாரங்கள், 2 கிரேன்களும் சேதமடைந்தன.
மற்றொரு சூறாவளி ஜியாங்சு மாகாணத்தின் சுஜோ பகுதியில் உள்ள ஷெங்ஸே நகரை தாக்கியது. அதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு, 149 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சீனாவின் வர்த்தக மையமான ஷாங்காய், சுஜோவிலிருந்து 100 கி.மீ தூரத்தில், சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.