முக்கிய செய்திகள்

சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது.

293

நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ தரவுகளால் சர்வதேச பொருளாதாரத்தின் மீது இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

இதற்கு முந்தைய காலாண்டில், சீனா பொருளாதாரம் 6.4% என்ற அளவில் வளர்ந்திருந்தது. இந்த வளர்ச்சியை அதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் சீனா 6.5% என்ற வளர்ச்சியை எட்டியிருந்தது.

இந்த முழு ஆண்டில் சீனா 6.6% என்ற அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. 1990ஆம் ஆண்டு முதல் சீனாவில் பதிவான மிக குறைவான வளர்ச்சி விகிதம் இது.

தற்போது வெளியாகியுள்ள இந்த புள்ளிவிபரங்கள் ஏற்கனவே கணிக்கப்பட்ட தரவுகளுடன் ஒத்துபோகிறது என்றாலும், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாட்டின் பலவீனமான வளர்ச்சி பெரும் கவலையை அளிக்கிறது.

இன்றைய தினம் (திங்கட்கிழமை) வெளியான அதிகாரபூர்வ தரவுகள், சர்வதேச நிதி நெருக்கடி காலத்தில் பதிவான மிகவும் பலவீனமான வளர்ச்சி விகிதமாகும்.

எனினும், சீனாவின் அதிகாரபூர்வ ஜிடிபி எண்ணிக்கையை மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அணுகுமாறு கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காரணம், அதுதான் நாட்டின் வளர்ச்சி பாதையை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கிறது.

மந்தநிலை குறித்த எச்சரிக்கைகள்

பல ஆண்டுகளாக சீனா படிபடியான வளர்ச்சியை எட்டி வந்தாலும், சமீப மாதங்களில் சீனாவில் அதிகரித்துள்ள மந்தநிலை குறித்த அதிகரித்த கவலையால் நெருக்கடி சந்தையில் நிறுவனங்கள் எச்சரிக்கை மணியை எழுப்புகின்றன.

சீனாவில் நிலவி வரும் மந்த நிலையை ஆப்பிள் நிறுவனம் இந்த மாதம் தொடக்கத்தில் சுட்டிக்காட்டி, ஆப்பிள் விற்பனை சரியும் என்று முன்பே கணித்திருந்தது.

அமெரிக்காவுடனான வர்த்தக போரினால் ஏற்பட்ட விளைவு குறித்து கார் உற்பத்தியாளர்கள் மற்றும் பிற நிறுவனங்களும் பேசியுள்ளன.

ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சியை காட்டிலும் உள்நாட்டு உற்பத்தியை சார்ந்த வளர்ச்சி பாதையை நோக்கி சீன அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது.

சமீப மாதங்களில், பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் நோக்கில் சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.

கட்டுமான பணிகளை விரைவாக முடித்தல், சில வரி குறைப்புகள் மற்றும் வங்கிகள் தங்கள் தேவைக்கான கையிருப்பை அளவை குறைத்தல் ஆகியவை சீனாவின் பொருளாதார மந்த நிலையை சீரமைக்கும் முயற்சிகளில் அடங்கும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *