கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி அறிய உலக சுகாதார நிறுவனத்தின் குழுவொன்று விசாரணைக்காக சீனாவுக்குச் செல்லவுள்ளது.
கொரோனா வைரஸ் முதன் முதலில், சீனாவின், வுஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டது.
எனினும், வுஹானில் கொரோனா வைரஸ் தோன்றவில்லை என சீனா மறுத்து வருகிறது.
இந்த நிலையில், சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸின் தோற்றம் பற்றிய விசாரணை ஜனவரியில் நடைபெறும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா செல்லும் சர்வதேச குழுவில் தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் விலங்கு நல நிபுணர்களை இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.