முக்கிய செய்திகள்

சீன கோடீஸ்வரரரைக் காணவில்லை

136

சீன கோடீஸ்வரரும், சீனாவின் மிகப்பெரிய இணைய மூல வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவுனருமான ஜக் மா (jack ma) காணாமல் போயுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலிபாபா நிறுவனர் ஜக் மா  (jack ma), கடந்த ஒக்ரோபர் 24ம் நாள், தொழில் நிறுவனங்கள் மீது, சீன அரசு விதித்து வரும் கட்டுப்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இதனால் கோபமடைந்த சீன அரசு, அலிபாபா நிறுவனம் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

அலிபாபா நிறுவனத்தின் மீது சீன அரசு தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ஜக் மா, பொது வெளியில் தோன்றாமல் இருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ள ஜக் மா  (jack ma) குறித்த உண்மைகளை, சீன அரசு மறைப்பதாகவும், பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *